இசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் மிஸ் யூ படத்தின் “சொன்னாரு நைனா” பாடல் !
‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,
தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன் துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மிஸ் யூ”.
இப்படத்திலிருந்து வெளியான “சொன்னாரு நைனா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையமெங்கும் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், நடிகர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இக்கூட்டணியின் வித்தியாசமான குரலில், ரோகேஷ் வரிகளில், தரை லோக்கல் கானாவாக, கேட்டவுடன் உற்சாகத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல்.
துள்ளலான நடனத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இசை ரசிகர்களையும், இணைய ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான இப்பாடல் இணையமெங்கும் இப்போது வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் அழகான ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார், ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர்.
‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’ பண்ணாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.
‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.
மக்கள் தொடர்பு ஜான்சன்.
விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.