back to top
-11.1 C
New York
Wednesday, January 22, 2025

Buy now

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது ” Sweety Naughty ” G.ராஜசேகர் இயக்குகிறார்.

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ் மற்றும்  R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு  ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்.

சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன்  மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D.F.Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த ஆதித் அருண் (எ) திரிகன்  இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா,

பிரபல தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு இவர்களுடன், விஜய் டிவி தனசேகர், வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகிறது. படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான வித்தியாசமான காமெடி திரைக்கதை இது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம் ஹைதராபாத், கோவை, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு பாடல்களை துபாயில் பல லட்சம் செலவில் பிரமாண்டமாக படமாக்க இருக்கிறோம் என்றார் இயக்குனர் G. ராஜசேகர்.

இந்த படத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமநாய்டு ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles